சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க, “இவ்வருடத்தின் (2023) ஜனவரி முதல் ஜுலை 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில்,  5,456 முறைப்பாடுகள்  சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகளும், மற்றும் சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பில் 196 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால், ஐந்தாண்டு தேசிய திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version