மெனிங்கோகோகல் நோய் தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, அந்நோய் அறிகுறிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சல், குளிர், சோர்வு, வாந்தி, கை மற்றும் பாதங்களில் குளிருணர்வு போன்ற அறிகுறிகள் மெனிங்கோகோகல் நோயின் பொதுவான அறிகுறிகளாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

ரத்மலானையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவரும் ஜா-எல, நிவாங்கமவையில் வசிப்பவருமான 49 வயதுடைய ஒருவரே மெனிங்கோகோகல் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த நோய் முதலாவதாக காலி சிறைச்சாலையில் கண்டறியப்பட்டது.

இந்நோயாளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மெனிங்கோகோகல் நோய் போன்ற அறிகுறிகள் இனம்காணப்பட்டதால் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜெயன் மெண்டிஸ் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், மெனிங்கோகோகல் நோயின் அறிகுறிகளுடன் எந்தவொரு நோயாளியும் தனது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மெனிங்கோகோகல் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டெய்லி மிரருக்கு கருத்து தெரிவித்த கொழும்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜயதிலக, கம்பஹா MOH அலுவலகம் அவ்வாறான ஒரு நோயாளி தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாகவும் இந்நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version