புற்றுநோய்க்கான மருந்து கண்டுப்பிடிப்பு!

உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது.

அடிஸோலிசூமாப் எனப்படும் குறித்த ஊசி மருந்து உடலில் செலுத்தப்பட்ட ஏழு நிமிடங்களில் தொழிற்பட ஆரம்பிக்கும் என அந்நாட்டின் சுகாதாரத்துறையான NHS தெரிவித்துள்ளது.

தோலுக்கு அடியில் செலுத்தக்கூடிய இந்த ஊசி மருந்தால், புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஊசி மருந்து மூலம் புற்றுநோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடிவதுடன், தினமும் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் NHS அறிவித்துள்ளது.

தற்போது இந்த ஊசி மருந்திற்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version