புதிய கூட்டணிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா பொறுப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அதிகாரம் உட்பட சகல பொறுப்புக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் யாப்பாவிடம் ஒப்படைக்கும் யோசனை பாராளுமன்ற உறுப்பினர் லான்சா மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் குழு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு, புத்தளம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சில உள்ளூர் அரசியல்வாதிகளும் இந்தக் கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கூட்டணி விரைவில், கூட்டணிக்கான பிக்கு அமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version