கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் மரமொன்று வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் வரையான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.