போலியானை ஆவணங்களை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயன்ற யாழ் இளைஞர் ஒருவர் இன்று (03.09) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு குடிவரவு,குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எயார் அரேபியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக ஜோர்டான் நோக்கி பயணம் செய்ய முற்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞரின் அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.