ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி பாகிஸ்தான் முல்டானில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தமது முதற் போட்டியிலும் பங்காளதேஷ் அணி தமது இரண்டாவது போட்டியிலும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். தோல்வியடைந்தால் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்காளதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
பங்களாதேஷ்
1 மொஹமட் நைம், 2 மெஹிடி ஹசான் மிராஸ், 3 நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, 4 ஷகிப் அல் ஹசான் (தலைவர்), 5 தௌஹித் ரிதோய், 6 முஷ்பிகுர் ரஹீம் (வி.கா), 7 ஷமீம் ஹொசைன் பட்வாரி, 8 அபிப் ஹொசைன், 9 தஸ்கின் அஹமட், 10 ஹசான் மஹ்முட், 11 ஷொரிபுல் இஸ்லாம்
ஆப்கானிஸ்தான்
1 ரஹ்மனுல்லா குர்பாஸ் (வி.கா), 2 இப்ராஹிம் சட்ரன், 3 ரஹ்மத் ஷா, 4 ஹஷ்மதுல்லா ஷஹீதி (தலைவர்), 5 நஜிபுல்லா சட்ரன், 6 மொஹமட் நபி, 7 கரீம் ஜனட், 8 குல்படின் நைப், 9 ரஷீத் கான், 10 முஜீப் உர் ரஹ்மான், 11 பசல்ஹக் பரூகி