‘என் உயிருக்கு ஆபத்து’ – சஜித் கூறுகிறார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரைப் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு ஆர்வமுள்ள குழுக்கள் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க திட்டமிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிடிவாதமாக இருப்பவர்கள் தம்மை கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் போட்டி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என சிலர் தெரிவித்து வருவதாகவும். தான் உயிருடன் இருந்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் தேர்தல் நடக்கும் நேரத்தில் உயிருடன் இருந்தால் மட்டுமே தன்னால் போட்டியிட முடியும் எனவும், தாம் போட்டியிட மாட்டேன் என்று அவர்கள் அழுத்தமாக தெரிவிக்கும்போது, அது தனது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று தாம் எண்ணுவதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எசஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version