‘சஜித்தை கொலை செய்ய யாருக்கும் ஆர்வமில்லை’ – பாலித ரங்கே பண்டார!

சஜித் பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போதே, பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“மிஸ்டர் பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை. நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அடிக்கடி ஊடக சந்திப்புகளை நடத்தும் முஸ்லீம் உறுப்பினர் ஒருவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தமக்கு தெரிவித்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக பகிரங்கமாக பொய் சொல்கிறார் எனவும் தமக்கு தெரிவித்ததாக ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சஜித் பிரேமதாச எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம், அவர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருமுறை போட்டியிடச் செய்தார், பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகளின்போது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக போட்டியிட வைத்தார், இதை நம்மில் எவரும் மறக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version