கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 07 இலட்சம் ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தெஹியோவிட்ட, பெலியத்த, தேவகம மற்றும் சீதுவ பிரதேசங்களைச் சேர்ந்த 20, 33 மற்றும் 55 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (05.09) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.