ஆசிய கிண்ணம் கொழும்பிலேயே நடக்கும்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி கொழும்பிலேயே நடைபெறவுள்ளது. சீரற்ற வாநிலை காரணமாக ஹம்பாந்தோட்டைக்கு மாற்றலாம் என்ற ஊகங்கள் எழுந்திருந்தன. அத்தோடு நேற்றைய தினம் அதற்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்று கொழும்பிலேயே நடைபெறுமென உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று(05.09) நடைபெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியோடு முதல் சுற்று நிறைவடைகிறது. நாளை இரண்டாம் சுற்றின் ,முதற் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் 09 ஆம் திகதி முதல் போட்டிகள் யாவும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் போட்டிகளை நடாத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் காரணமாகவே கொழும்பில் நத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக எந்த தகவலையும் இந்த விடயம் தொடர்பில் வெளியிடவில்லை.

போட்டி விபரம்

ஆசிய கிண்ணம் கொழும்பிலேயே நடக்கும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version