கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல்!

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

கஞ்சாவை மருத்துவ மூலிகையாக பயிரிட அனுமதி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

நேற்று (05.09) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஆயுர்வேத மூலிகைகளை மூலப்பொருளாக ஏற்றுமதி செய்வதை 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு தடை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இது இலங்கையின் உள்நாட்டு மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறினார். 

“மருத்துவ மூலிகைகளை மருந்துகளாக மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது எனக் கூறிய அவர், மருத்துவப் பயிர்களை வணிகப் பயிர்களாகப் பயிரிடாததால், நமது பழங்குடி மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும்”  என அவர் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version