வவுனியா, ஓமந்தை வைத்தியசாலை தரமுயர்வு

வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஓமந்தை வைத்தியசாலை என அழைக்கப்படும், ஓமந்தை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு, ஓமந்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுளள்து. இந்த தரமுயர்த்தலின் காரணமாக வவுனியா வடக்கை சேர்ந்தவர்கள் அதிகமான பலன்களை பெறமுடியும்.

இந்த வைத்திய சாலையின் தரமுயர்த்தலுக்கு வவுனியா பிராந்திய சுகாதர திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் கடுமையாக உழைத்துள்ளளதாக சுகாதர துறையினை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை பகுதி யுத்த காலத்துக்கு முன்னர் வவுனியாவின் ஒரு முக்கியமான பகுதியாக காணப்பட்டது. 90 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த சூழ்நிலை காரணமாக மக்களின் இடம்பெயர்வு காரணமாக பல பின்னடைவுகளை சந்தித்தது. மீண்டும் தற்போது அங்கே மீள் குடியேற்றங்கள் நடைபெற்று வருவதனால் அபிவிருத்தி நடவடிக்கைள் இடம்பெற்று வருகின்றன.


இருப்பினும் பல வசதிகளையும், அபிவிருத்தியையும் கொண்டிருந்த அந்த பகுதி முழுமையாக மீள திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா, ஓமந்தை வைத்தியசாலை தரமுயர்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version