அம்பரலங்காய்

இலங்கையில் பரவலாகக் காணப்படும் இந்தக் காய்களைச் சிங்களத்தில்
ඇඹරැල්ලා (அம்பரெல்லா) என்று சொல்கிறார்கள்! அதனையே தமிழ்ப்படுத்தி
‘அம்பரலங்காய்’ என்று சொல்கிறோம்!
ஆங்கிலத்தில் Amberella என்றும்
Wild Mango என்றும் கூறுவதோடு
அதன் அறிவியல் பெயர் Spondias dulcis அல்லது Spondias cytherea என்றும் கூறுகிறார்கள்! சில பிரதேசங்களில் இதை
“சீமை மாங்காய்”என்றும் அழைக்கிறார்கள்!
அதிகமாக பேசப்படாத இந்த அம்பரலங்காய்
பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்!

அம்பரலங்காய்

மருத்துவக் குணங்கள் மிகுந்த அம்பரலங்காய் புளிப்பு, இனிப்பு, கார்ப்புச்
சுவைகள் கலந்தது! இம் மரத்தின் இலை, காய், பழம்,பட்டை, பிசின் அனைத்தும் நோய்களுக்கு நிவாரணமளிக்கப் பயன்படுவதாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன!

அம்பரலங்காய் பச்சையாக உஷ்ண சுபாவமும், பழுத்தால் சீதள குணமும்
கொண்டது! காயில் Calcium, Phosphorus
அதிகமாக இருப்பதால் எலும்புகளையும்
பற்களையும் உறுதிப்படுத்துகிறது! இதயத்தின் செயற்பாடுகள் சீராக உதவுகிறது! உயிர்ச்சத்து A இருப்பதால்
கண்பார்வையைத் தெளிவாக்குகிறது;
உயிர்ச்சத்து C இருப்பதால் நோயெதிர்ப்புச்
சக்தியை மேம்படுத்துகிறது! இரத்த சோகையைப் போக்குவதோடு Cholesterolஐ
கட்டுப்படுத்தி பசியையும் தூண்டுகிறது
அம்பரலங்காய்! அதன் பழம் அஜீரணத்துக்கு
நிவாரணமளிக்கிறது! இவற்றை எல்லாம் விட அம்பரலங்காய் இரத்த அழுத்தத்தைக்
குறைக்கிறது! நீரிழிவு நோயாளிகளுக்கும்
சிறந்தது! இந்த அம்பரலங்காயை வெட்டிப் பார்த்தால் அதன் வித்து நம் உடம்பில் ஓடும்
நரம்புகள் போல் இருக்கும்.. அதனால்
இக்காய் நரம்புகளை உறுதிப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதாக சித்த வைத்தியம்
கூறுகிறது!

அம்பரெல்லா மரம் 5மீட்டர் உயரத்துக்கு
வளரக்கூடியது; ஆனால் இதன் ஒரு வகை
கையால் காய் பறிக்கக்கூடியதாகக் குட்டையாக இருக்கிறது! வீட்டுத் தோட்டத்தில் அலங்காரத்துக்கும் வளர்க்கப்படுகிறது!

அம்பரெல்லா தளிர்களை சம்பல் செய்து
சாப்பிடலாம்.. அம்பரலங்காய் மூலம்
சுவையான கறி சமைக்கலாம்; அச்சாறு,
சட்னி எல்லாம் செய்யலாம்; அதனால் செய்யப்படும் දෝසි ( தோஷி) பாரம்பரிய திருமண விழாக்களில் அதிகமாகப் பரிமாறப்படும் ஒன்று! அம்பரலங்காய் Juice
சுவையான ஓர் ஆரோக்கிய பானம்!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version