‘சேனல் 4 வெளியிட்டதை நான் முன்னரே கூறினேன்’ – மேர்வின் சில்வா அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து பேசும் போது, இந்த உண்மையை முதலில் வெளிப்படுத்தியவர் தாம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கால அரசியல்வாதிகள் பலரை முதல் குற்றவாளியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் முன்னரே தெரிவித்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

“முதுகெலும்பு இல்லாத ஒருவராக, மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றார். ஒன்றரை நாட்களுக்குப் பிறகு, தாக்குதல் நடந்ததை அறிந்தார். ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது. கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சொல்வது சரிதான், நான் அவரை மதிக்கிறேன், இந்த தாக்குதல் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது, மேலும் அவர்கள் ராஜபக்ஷக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்காக அந்த பேரழிவை ஏற்படுத்தினார்கள்,” என்று மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், சனல் 4 கூறுவதை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version