சனல் 04 ஆவணத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை – ஜனாதிபதி

சனல்04 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை எனவும், அதனுடன் தொடர்புடையவர்களே பதிலளிக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெளியிடடப்பட்ட ஒரு விடயமாகவே இதனை பார்க்க வேண்டுமென அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க கோரியதாகவும் குறித்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அது தொடர்பில் தமக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற குண்டு தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டிருந்ததனர். ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும், அதனுடன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் குற்றப் புலனாய்வு துறை பிரதானி சுரேஷ் சாலி ஆகியோர் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் சனல்04 ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version