”அனைத்தும் கட்டுக்கதை”- குற்றச்சாட்டை மறுக்கிறார் கோட்டா!

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்தும் போலியானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் சேனல் 4 வெளியிட்ட காணொளிக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், இதே சேனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் முழுமையான பொய்களால் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

21 ஏப்ரல் 2019 இல் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், 2019 நவம்பரில் நான் அதிகாரத்திற்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு உதவப்பட்டதாக சனல் 4 ஒளிபரப்பிய சமீபத்திய காணொளியில் தெரிவிக்கப்பட்டு தம்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் வகையில் ஹன்சீர் ஆசாத் மௌலானா, மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிய வெளியிட்ட பொய் கருத்துகள் எனவும், 2015ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகி தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மேஜர் ஜெனரல் சாலேவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சலே சேனல் 4 க்கு அறிவித்த அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுணதீவில் இடம்பெற்ற இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டு ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவங்களும், அதற்கு பின்னர் புலனாய்வு பிரிவினருடன் நிகழ்ந்த சம்பவங்களும் முற்றிலும் முட்டாள்தனமாக அவர் மீது கோர்க்கப்பட்ட விடயங்களாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சேனல் 4 இன் இந்த சமீபத்திய ஆவணப்படம் பெரும்பாலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே அமைகிறது எனவும், குறித்த சேனல் ஒளிபரப்பிய முந்தைய ஆவணப்படங்களும் அவ்வாறே அமைந்திருந்தாகவும், தாம் பதவியில் இருந்தபோது ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர், முள்ளிக்குளத்திலுள்ள மடு தேவாலயம் மற்றும் தேவாலயத்தின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புக்கு தாம் உதவியதுடன், பரிசுத்த பாப்பரசரை இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு நான் உதவியதோடு, அவருடைய விஜயத்தை ஏற்பாடு செய்வதற்காக அப்போதைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவிற்கும் தாம் தலைமை தாங்கியாராகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான பல நன்மைகளை செய்த தம் மீது இவ்வாறான குற்றங்களை சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்து, அணைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version