முல்லைத்தீவில் பெண்களை முன்னேற்றும் வேலைத்திட்டம்!

UNWomen நிறுவனத்தின் அனுசரனையுடன் chrysalis நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெண்களை முன்னேற்றும் திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் (06.09) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா பிரதேசசெயலகங்களின் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் மற்றும் உதவி வழங்கல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபாவனி, உதவி மாவட்டச் செயலாளர், லி.கேகிதா மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் Chrysalis நிறுவனத்தின் இணைப்பாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version