சீமானால் நேர்ந்த கதி : நீதிக்காக போராடும் பிரபல நடிகை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார்.  இது குறித்து தமிழக மகளிர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பில் விஜயலெட்சுமி வழங்கியுள்ள நேர்காணலில்,  7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக பொலிஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் திருவள்ளுர் நீதிமன்றத்திலும் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தார். 

இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான முறைப்பாடு மீது பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். 

இதன்படி  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த பொலிஸார் தீர்மானித்து, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையில், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுள்ளன.

இதன் முடிவுகள் வெளியாகிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version