வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை உயிரிழந்தமைக்கு தடுப்பூசி விசமானதே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஊசி செலுத்திய பின்னர்தான் குழந்தை சுகயீனம் அடைந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 02 ஆம் திகதி குழந்தைக்கு நான்கு மாதத்தில் செலுத்தப்படும் தடுப்பூசியானது வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியத்தில் வைத்து செலுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து குழந்தை கடுமையாக சுகயீனம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.