இயக்குனர் மாரிமுத்து காலமானார்!

பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று (08.09) திடீரென காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடருக்கு டப்பிங் பேசும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது 57 வயதாகுகிறது.

இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில், ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு ஏரளாமான புகழை தேடித்தந்தது.

இந்நிலையில் அவருடைய மறைவு திரைதுறையினர் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version