ரணிலுக்கு ஆதரவு வழங்கவே தயாசிறி பதவி நீக்கம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க அந்த கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர இடையூறாக இருப்பதனாலேயே அவரை பதவி நீக்கம் செய்ததாக தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொது செயலாளாரே தேர்தல் திணைக்களம் மற்றும் பாரளுமன்ற செயற்பாடுகளுக்கு கையொப்பமிடும் முக்கியஸ்தர் ஆவார். அவரே கட்சிகளது கூட்டணி போன்ற விடயங்களுக்கு கையொப்பமிடும் அதிகாரம் உள்ளவர்.

தயாசிறி ஜயசேகர இலங்கை சுதந்திரக் கட்சியின் பொது செயலராக கடமையாற்றும் பட்சத்தில் இந்த செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பார் என்ற காரணத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. அவர் வேறு ஒரு கூட்டணி தொடர்பிலும், புதிய வேட்பாளர் தொடர்பிலும் கரிசனை காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் இலை இலங்கை சுதந்திர கட்சி உறுப்பினர்களே தயாசிறி ஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்படவேண்டுமென அதிகமாக அழுத்தம் வழங்கியதாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை சுதந்திர கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸ்ஸாநாயகே, லசந்த அழகியவண்ண ஆகியோர் நிமல் லான்ஷாவின் இணைப்பில் ஜனாதிபத்தி ரணில் விக்ரம்சிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அறிய முடிகிறது.

இலங்கை சுதந்திர கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து கொள்வது தொடர்பில் வேலை செய்பவர்களே தனது பதவி பறிப்புக்கு காரணமென ,பாராளுன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version