பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை சீர்செய்வதில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
400 பாதுகாப்பற்ற புகையிரத குறுக்குப் பாதைகள் உள்ளன என்றும்,பாரிய செலவில் இந்த நேரத்தில் அவசர சமிக்ஞை கட்டமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கத்தினால் முடியாது எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் நேற்று (08.09) தெரிவித்த நிலையில், இதற்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேற்படி உறுதியளித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரை திட்டத்தை செயல்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட செலவுப் பட்டியலை வழங்குமாறும்,இதற்கு உடனடியாக ஒத்துழைப்பை வழங்க தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.