வெளிநாட்டு தொழிலாளர்களால் நாட்டிற்கு 499.02 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இந்த தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 74.4 சதவீத வளர்ச்சியாகும் என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் தொடக்கத்தில், 2023 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.