ஆசிய கிண்ணம் – இலங்கை வெற்றி வாய்ப்பை தொட்டது

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் சுப்பர் 04 லீக் தொடரின் இரண்டாம் போட்டி இலங்கை, பங்காளதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. பொதுவாக இந்த மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெறுபவர்கள் துடுப்பாடுவது வழமை. மழை வாய்ப்பு காரணமாக பங்களாதேஷ் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் டிமுத் கருணாரட்ண அணியின் ஓட்ட எண்ணிக்கை 34 ஆக காணப்படும் போது ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பத்தும், நிஸ்ஸங்க குஷல் மென்டிஸ் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை பெற்று அணியை பலப்படுத்தினார். 74 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்த நிலையில் இரண்டாம் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இணைப்பாட்டங்கள் முறியடிக்கப்பட்டால் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்படும் இலங்கையின் வழமை இன்றும் நடைபெற்றது. குஷல் மென்டிஸ் 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் களத்தடுப்பாளரை சரியாக கணிக்காத துடுப்பாட்டம் மூலம் ஆட்டமிழந்தார்.

கடந்த இரு போட்டிகளிலும் ஓரளவு சிறப்பாக துடுப்பாடிய சரித் அஸலங்க குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற தொடங்கியது. மத்திய வரிசை தொடர்ச்சியாக பிரகாசிக்காமை இலங்கை அணிக்கு சிக்கலே. 50 ஓவர்கள் போட்டியில் ஓட்டங்களை அதிகரிப்பது விக்கெட்டை பாதுகாப்பது என்பன மத்திய வரிசையின் முக்கிய பணியாகும். இரண்டுமில்லாவிட்டால் இலக்குகளை அதிகரிப்பது கடினமாகும்.

தனஞ்சய டி சில்வாவும் வேகமாகவே ஆட்டமிழக்க மேலும் இலங்கை அணியின் நிலைமை தடுமாற்றத்துக்கு சென்றது. தனஞ்சய இந்த தொடர் முழுவதுமே தடுமாறி வருகின்றார்.

இலங்கை அணியின் மத்திய வரிசையின் நம்பகரமான துடுப்பாட்ட வீரராக மாறி வரும் சதீர சமரவிக்ரம இன்றும் நிதானம் காத்து துடுப்பாடி அணியை காப்பாற்றினார். இன்றைய அவரின் துடுப்பாட்டமே இலங்கை அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என நம்பலாம். இன்று அவர் பெற்றுக் கொண்ட ஓட்டங்களே அவரின் அதிக பட்ச ஓட்டங்கள் ஆகும்.

தடுமாறி வந்த அணியின் தலைவர் தஸூன் சாணக்க இன்று பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் அவருக்கும், அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையினை வரவைத்துள்ளது. சதீர-சாணக்க ஜோடி அரைச்சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்து பலமான நிலைக்கு அணியை கொண்டு சென்றனர். 8 இன்னிங்சின் பின்னர் சாணக்க 20 ஓட்டங்களை தொட்டுள்ளார். தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகத்தை மூலம் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்கு அழுத்தம் வழங்கினார்கள். ஆரம்ப 06 விக்கெட்களையும் அவர்களே கைப்பற்றினார்கள். ஹசன் மஹ்மூட்டின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய நிலையிலும் அவர்களே விக்கெட்களை கைப்பற்றிய நிலையிலும் மூன்று ஓவர்கள் பாவிக்கப்படாமல் சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த மூன்று ஓவர்களையும் வீசி நிறைவு செய்தனர்.

இந்த இலக்கினை பங்களாதேஷ் அணி துரதியடிப்பது இலகுவானது அல்ல. மழைக்கான வாய்ப்புகளும் குறைந்துள்ள நிலையில் இலங்கைக்கான வெற்றி வாய்ப்ப அதிகரித்துள்ளது.

மழை பெய்வதற்கான வாய்புகள் இல்லாமல் போயுள்ளது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் இடையூறு இல்லாமல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

ஏற்கனவே முதல் சுற்றில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வியடையும் பட்சச்தில் இறுதிப் போட்டி வாய்பை இழக்கும் நிலை உருவாகலாம். ஏற்கனவே சுப்பர் 04 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இலங்கை அணி சுப்பர் 04 இல் முதற் போட்டியில் இன்று மோதுகிறது. இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஒரு அணி குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவேண்டும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கL.B.Wஷொரிபுள் இஸ்லாம்  406050
டிமுத் கருணாரட்னபிடி- முஷ்பிகுர் ரஹீம்ஹசன் மஹ்முட்181720
குசல் மென்டிஸ்பிடி- ரஸ்கின் அஹமட்ஷொரிபுள் இஸ்லாம்  507361
சதீர சமரவிக்ரமபிடி –ரஸ்கின் அஹமட்937282
சரித் அசலங்கபிடி – ஷகிப் அல் ஹசன்ரஸ்கின் அஹமட்102310
தனஞ்சய டி சில்வாபிடி- முஷ்பிகுர் ரஹீம்ஹசன் மஹ்முட்061600
தஸூன்  ஷானகBoweldஹசன் மஹ்முட்243210
டுனித் வெல்லாளகேRun Out 030300
மஹீஸ் தீக்ஷணபிடி- முஷ்பிகுர் ரஹீம்ரஸ்கின் அஹமட்020321
கஸூன் ரஜித  010100
       
உதிரிகள்  10   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்257   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ரஸ்கின் அஹமட்10006203
ஷொரிபுள் இஸ்லாம்  08004802
ஹசன் மஹ்முட்09005703
ஷகிப் அல் ஹசன்10004400
நசும் அஹமட்10013100
மெஹதி ஹசன் மிராஸ்03001400

1 டிமுத் கருணாரட்ன, 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 குஷல் மென்டிஸ், 4 தனஞ்சய டி சில்வா, 5 சதீர சமரவிக்ரம, 6 தஸூன் சாணக்க, 7 டுனித் வெல்லாளகே, 8 மஹீஸ் தீக்ஷண, 9 மதீஷ பத்திரனே, 10 கஸூன் ரஜித, 11 சரித் அசலங்க

1 நைம் ஷேக், 2 மெஹதி ஹசன் மிராஸ், 3 ஷகிப் அல் ஹசன் (தலைவர்), 4 லிட்டன் டாஸ் 5 முஷ்பிகுர் ரஹீம், 6 தௌஹித் ரிதோய், 7 நசும் அஹமட் 8 ஷமீம் ஹொசைன் 9 ஷொரிபுள் இஸ்லாம் 10 ரஸ்கின் அஹமட், 11 ஹசன் மஹ்முட்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version