மர்மமான முறையில் யுவதி மரணம்!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (09.09) காலை இடம்பெற்றுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி இங்கிலாந்தில் வசிப்பவர் எனவும் வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் முகநூலில் பழகி, பின்னர் இருவரும் காதலித்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அல்விஸ் மாவத்தையில் உள்ள குறித்த வீட்டுத் தொகுதியில் இணையவழியில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த வீடொன்றை வாடகைக்கு எடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் தங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவர் நாளை (10.08) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையிலேயே இன்று (09.09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version