ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
சுப்பர் 04 சுற்றில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் அவர்களின் அடுத்த சுற்று வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா அணி முதற் போட்டியில் விளையாடும் நிலையில் அவர்களுக்கு வெற்றி ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரு அணிகளது போட்டி முடிவுகளும் இலங்கை அணியின் வாய்ப்பிலும் தாக்கம் செலுத்தும்.
போட்டி மழையால் குழப்பப்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. சீரான வாநிலை மைதானத்தில் காணப்படுகிறது.
அணி விபரம்
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷர்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்
பாபர் அசாம் (தலைவர்), முகமட் ரிஸ்வான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், இப்திகார் அகமட், அகா சல்மான், ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா, பஹீம் ஷா
