பிரான்சில் நடைபெற்று வரும் ரக்பி உலகக்கிண்ண தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று(09.09) மாலை ஆரம்பித்து இன்று அதிகாலை நிறைவுக்கு வந்தன. நான்கு போட்டிகள் நடைபெற்றன. நான்கு போட்டிகளிலும் பலமான அணிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இத்தாலி நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 52-8 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா அணி முதல் 20 நிமிடங்களுக்குள் பெற்ற புள்ளிகளே இந்த 8 புள்ளிகளுமாகும். அதன் பின்னர் புள்ளி பெறும் வாய்ப்பை அவர்களுக்கு இத்தாலி அணி வழங்கவே இல்லை.
இரண்டாவது போட்டி அயர்லாந்து மற்றும் ரொமேனியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. அயர்லாந்து அணி 82-8 என அமோக வெற்றி பெற்றுக்கொண்டது.
மூன்றாவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ஜோர்ஜியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டி ஓரளவு இறுக்கமானதாக அமைந்தது. இறுதியில் அவுஸ்திரேலியா அணி 35-15 என வெற்றி பெற்றது.
நான்காவது போட்டி பலமான இங்கிலாந்து மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 27-10 என ஆராஜன்டீனா அணியை வெற்றி பெற்றது.
தினமும் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30, இரவு 7.30, 9.30 நள்ளிரவு 12.30 இற்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.