யாழில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கோப்பாய் பகுதியில் வசிக்கும் எமில் ரவி என்பவரே உயிரிழந்துள்ளார். 

விபத்தையடுத்து அதிசொகுசு பேருந்தின் சாரதி, அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் ஒன்றுக்கூடிய பொதுமக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version