நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் ஊழியர் பற்றாக்குறை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையை இயக்க பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நவம்பர் மாதம் முதல் ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆலையில் குறைந்தபட்சம் 40 எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுவரை 34 பேர் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய குழுவினர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ள நிலையில், மேலும் பத்து பேர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது ஜெனரேட்டர் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக தற்போது செயலிழந்துள்ளதுடன் நவம்பர் மாதத்தில் இருந்து வழமைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஊழியர் பற்றாக்கறை பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version