ராஜகுமாரியின் மரணம் – பொலிஸ் நிலைய தளபதிக்கு மீண்டும் அதே பதவி!

பொலிஸ் காவலில் உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த ராஜன் ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணத்தின் பின்னர் வெலிக்கடை பொலிஸில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையத் தளபதி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனக பெரேரா, நீதிமன்றத்தில் விவாதிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (11.09) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த ஆட்சேபனையின் அடிப்படையில் எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் அணிவகுப்புக்காக முன்னிலையாகுமாறு உத்தரவிடபட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version