ரக்பி உலகக்கிண்ணம் மூன்றாம் நாள் முடிவுகள்

பிரான்சில் நடைபெற்று வரும் ரக்பி உலகக்கிண்ண தொடரின் மூன்று போட்டிகள் நேற்றும், இன்றுமாக நடைபெற்றன.

முதற் போட்டியில் ஜப்பான் அணி சில்லி அணியை 42 இற்கு 12 என்ற புள்ளிகள் வித்தியசாத்தில் வெற்றி பெற்து. முதற் பாதியில் ஜப்பான் அணி 21-7 என முன்னிலையை பெற்றிருந்தது.

தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இறுக்கமாக விறு விறுப்பாக நடைபெற்றது. தென்னாபிரிக்க அணி அரைப்பகுதி நேரத்தில் 6-3 என்ற இறுக்கமான முன்னிலையை பெற்றுக்கொண்டது. இரண்டாம் பாதியில் தென்னாபிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி மேலும் 12 புள்ளிகளை பெற்றுக் கொண்டது. போட்டி நிறைவில் 18-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுக் கொண்டது.

மூன்றாவது போட்டியாக இன்று அதிகாலை நிறைவடைந்த போட்டியில் வேல்ஸ் அணி, பிஜி அணியினை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியும் கூட கடுமையான போட்டி நிறைந்ததாக அமைந்தது. முதற் பாதி 18-14 என கடுமையான இறுக்கமா இருந்தது. அதில் வேல்ஸ் அணியே முன்னிலை பெற்றிருந்தது. இறுதியில் 32-26 என வேல்ஸ் அணி வெற்றியோடு போட்டியை நிறைவு செய்து கொண்டது.

முதல் சுற்றின் முதற் கட்டப்போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்டப் போட்டிகள் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளன.

புள்ளி விபரம்

ரக்பி உலகக்கிண்ணம் மூன்றாம் நாள் முடிவுகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version