பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட எட்டு பேர், கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றை குழப்பிய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜாதிக பல சேன அமைப்பின் தலைவர் வட்டரேக்க விஜித தேரவினால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பு நடைபெற்ற இடத்தினுள் புகுந்து அவரை அச்சுறுத்தி, ஊடக சந்திப்பையும் குழப்பியதாக முறைப்பாடு செய்யப்பட்டு அதற்கான வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பில் முறைப்பாட்டாளர்கள் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு நஷ்ட ஈடாக 300,000 ரூபா வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டுளள்து. அத்தோடு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்படவேண்டாமென நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.