கடந்த ஆண்டு நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட, ன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தனது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி ஒன்றில் இனைந்து தமது அரசியல் வாழ்வை மீண்டும் ஆரம்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகியதிலிருந்து அமைதி காத்து, அரசியல் வாழ்விலிருந்து விலகியிருந்த இவரின் இந்த தீர்மானம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் கொள்வனவு செய்யப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவருடன் இருந்த பலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அரசியல் காட்சிகள் தயாராகி வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வை இக்கட்சியின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.