சீனாவின் பலப்பகுதிகளில் பெய்துவரும் இடைவிடாத கனமழை காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹைகுய் எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது 08 நாட்களுக்கு முன்பு சீனாவை தாக்கியது. இந்த புயலைத் தொடர்ந்து தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது.
இதன்காரணமாக யூலின் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் இடைவிடாத மழை, நிலச்சரிவுக்கும் வழிவகுத்துள்ளது. இதுவரை 115 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இதனால் பலப்பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், 03 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.