இந்தியாவை உருட்டி எடுத்த வெற்றி வாய்ப்பை உருவாக்கிய இலங்கை

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி இந்தியா மற்றும் இலங்கைஅணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. சுப்பர் 04 சுற்றின் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கை அணியின் அபார சுழற் பந்துவீச்சு மூலமாக இந்தியா அணியை தடுமாற வைத்து இலங்கை அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியா அணியின் ஆரம்பம் இன்றும் சிறப்பாக அமைந்தது. 80 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இதில் 19 ஓட்டங்களை மாத்திரமே சுப்மன் கில் பெற்றுக்கொண்டார். ரோஹித் ஷர்மா ஒரு பக்கமாக வேகமாக அடித்து ஓட்டங்களை உயர்த்தினார். ஆனால் இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர் இந்தியா அணியை டுனித் வெல்லாளகே உருட்டி எடுத்தார். அவர் விட்ட குறையை சரித் அசலங்க செய்து முடித்தார். சரித் அசலங்க தனது சிறந்த பந்துவீச்சு பெறுதியை பெற்றுக் கொண்டார்.

இந்தியா அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியா அணி இடதுகர சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு வழமையாக தடுமாறுவது போல இன்றும் டுனித் வெல்லாளகேயின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டினை வீழ்ந்தது. அடுத்த ஓவரிலேயே அவர் விராத் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தினார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டினை டுனித் வெல்லாளகே கைப்பற்ற இந்தியா அணி தடுமாற ஆரம்பித்தது.

இடதுகர துடுப்பாட்ட வீரர் ஒருவர் நான்காமிலக்கத்தில் துடுப்பாட வேண்டும் என்ற காரணத்தினால் இஷான் கிஷன் நான்காமிடத்திலும் லோகேஷ் ராகுல் ஐந்தாமிடத்திலும் இன்று துடுப்பாட களமிறங்கினர்.

மூன்று விக்கெட்கள் வீழ்த்த்தப்பட்ட நிலையில் தடுமாறிய இந்தியா அணியின் வேகம் மிகவும் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் ராகுல், இஷன் கிஷன் இணைப்பட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். 62 ஓட்டங்களாக இணைப்பாட்டம் காணப்பட்ட வேளையில் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை டுனித் வெல்லாளகே கைப்பற்றி முதல் நான்கு விக்கெட்களையும் தகர்த்தார்.

டுனித் நான்கு விக்கெட்களை கைப்பற்றி முடிக்க ஐந்தாவது விக்கெட்டை சரித் அசலங்க கைப்பற்றினார்.
தனது இறுதிப் பந்தில் ஐந்தாவது விக்கெட்டாக ஹார்டிக் பாண்ட்யாவை ஆட்டமிழக்க செய்து இன்றைய இலங்கையின் ஹீரோவாகா மாறினார் டுனித் வெல்லாளகே. டுனித் ஆசிய கிண்ண தொடரில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சிறப்பாக பாவித்துள்ளார். இன்று அவர் கைப்பற்றிய விக்கெட்கள் அவர் நினைவில் வைக்கக்கூடிய முக்கிய விக்கெட்கள் ஆகும். இதுவே அவரின் முதல் 05 விக்கெட் பெறுதியாகும். அத்தோடு இலங்கை அணி சார்பாக 5 விக்கெட்களை கைப்பற்றிய வயது குறைந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சரித் அசலங்கவும் இன்று மிக சிறப்பாக பந்துவீசி ஓட்டங்களை வழங்காமல் 04 விக்கெட்களை தகர்த்துக் கொடுத்தார். இதுவே அவரின் சிறந்து பந்துவீச்சு பெறுதியாகும்.

இன்று பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் ரோஹித் ஷர்மா 10,000 ஓட்டங்களை பூர்த்தி செய்த 15 ஆவது வீரராகவும், ஆறாவது இந்திய வீரராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அத்தோடு 10,000 ஓட்டங்களை வேகமாக கடந்த இரண்டாவது வீரராகவும் ரோஹித் மாறியுள்ளார்.

இறுதி நேரத்தில், இறுதி துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கையினை அவர்கள் போராடக்கூடிய நிலைக்கு கொண்டு சென்றது. குறிப்பாக அக்ஷர் பட்டேல் பெற்ற ஓட்டங்கள் இந்தியா அணிக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மாற்றங்களும் இன்று மிக சிறப்பாக அமைந்தன.

இன்று வெற்றி பெறுமணிக்கு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோகித் சர்மாBowled  டுனித் வெல்லாளகே534872
சுப்மன் கில்Bowledடுனித் வெல்லாளகே192520
விராட் கோலிபிடி- தஸூன் சாணக்கடுனித் வெல்லாளகே031200
இஷன் கிஷன் சரித் அசலங்க 336111
லோகேஷ் ராகுல்பிடி-டுனித் வெல்லாளகேடுனித் வெல்லாளகே394420
ஹார்டிக் பாண்ட்யாபிடி- குஷல் மென்டிஸ்டுனித் வெல்லாளகே051800
ரவீந்தர் ஜடேஜாபிடி- குஷல் மென்டிஸ்சரித் அசலங்க 041900
அக்ஷர் பட்டேல்பிடி- சதீர சமரவிக்ரமமஹீஸ் தீக்ஷண263601
ஜஸ்பிரிட் பும்ராBowledசரித் அசலங்க 051200
குல்தீப் யாதவ்பிடி- தனஞ்சய டி சில்வாசரித் அசலங்க 000100
மொஹமட் ஷிராஜ்  05190 
உதிரிகள்  21   
ஓவர்  49.1விக்கெட்  10மொத்தம்213   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ராஜித04003000
மஹீஸ் தீக்ஷண9.1004101
தஸூன் சாணக்க03002400
மதீஷ பத்திரனே03002700
டுனித் வெல்லாளகே10014005
தனஞ்சய டி சில்வா10002800
சரித் அசலங்க 09011804

அணி விபரம்

இந்தியா அணி ஷர்டூல் தாகூரை நிக்கி அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேலை அணியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியா அணியின் துடுப்பாட்டம் பலம் பெறுவதுடன், சுழற்பந்துவீச்சு மேலும் பலமடைகிறது.

இலங்கை அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.

இந்தியா

ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்

இலங்கை

டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, கஸூன் ராஜித, சரித் அசலங்க

போட்டி முன்னோட்டோ வீடியோ

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version