வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள்!

வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பயணிகளின் பயணப் பொதிகள் அடங்கிய கொள்கலனில் இருந்து ஹஷிஸ் வகை போதைப்பொருள் இனங்காணப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 1 கிலோ 98 கிராம் கொண்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி 16,470,000 ரூபாய் எனக்  கணிக்கப்பட்டுள்ளது. 

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சூட்கேஸில் இருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த பயணப்பொதி வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version