தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை சாதனை!

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை சாதனை!

இப்போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவன் கே.பவிசனே பலத்த போட்டிக்கு மத்தியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதேவேளை குறித்த பிரிவில் எஸ்.டிருஷாந்த், எஸ்.டிரோன் ஆகிய இரு மாணவர்களும் வெள்ளிப் பதக்கத்தையும் என்.நிருகாஷ், ஆர்.ருகேஷ்நாத் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தையும் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை சாதனை!

அதேவேளை குறித்த தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் Taekwondo விளையாட்டு பிரிவில் சிவானந்தா பாடசாலையை சேர்ந்த ஐ.சர்வகன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றியீட்டிய மாணவர்களையும் பாசாலையின் அதிபர் எஸ்.தயாபரன், பொறுப்பாசிரியர் ஆர்.தினேஸ்குமார் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான திருசெல்வம், ஆர்.கிசோத் ஆகியோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version