இலங்கையில் மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள்!

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 03 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாரடைப்பால் உயிரிழக்கும் 50 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் இரேஷா சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version