சோழன் சாதனை படைத்த போகவந்தலாவை மாணவி!

போகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 30 நிமிடங்களில் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள சென்.மேரிஸ் தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் வசந்தகுமார் நிதர்ஷனா எனும் மாணவியே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நேற்று (20.09) காலை 6.05 மணிக்கு நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய மைதானத்தில் இருந்து சாதனை பயணத்தை ஆரம்பித்த அவர், 2.35 மணியளவில் 54 கி.மீ. தூரம் நடந்து சாதனை படைத்துள்ளார்.

நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட் ஆகிய நகரங்கள் ஊடாக பகவந்தலாவை சென்றடைந்த போது, அவரை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்மக்கள் வீதிகளில் வரிசையாக நின்று அவரை உற்சாகப்படுத்தி, தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதி சினகவாணி ராஜா, இந்த நடைப்பயணத்தை கண்காணித்து, சோழன் சாதனை புத்தகத்தில் நிதர்ஷனாவின் பெயர் இடம்பெறும் என அறிவித்துள்ளார்.

அவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சோழன் சாதனை படைத்த போகவந்தலாவை மாணவி!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version