தனுஷ்க குணத்திலகவுக்கு 28 ஆம் திகதி தீர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பாலியல் துஸ்பிரயோக வழக்கு விசாரணை நேற்று(20.09) அவுஸ்திரேலியா டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்தது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட நபரின் அனுமதியின்றி உடலுறுவு கொண்டதாக சுமத்தப்பட்டிருந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது நீதிபதி சாரா ஹகெட்டிடம் தனுஷ்க குணத்திலகவிடம் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் ஒளிபரப்பபட்டது. இதன் போது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருடன் ஆன்மீக உரையாடலைப் பற்றி பேசியதாகவும், அதன் போது உணைர்ச்சிவசப்பட்டு அவர் அழுததாகவும் அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பெண் வித்தியசமனானவர். வித்தியாசமான சக்தி உள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது. அதனால் அந்த விடயங்களில் அதிகமாக அக்கறை காட்டினேன். ஏனெனில் நான் ஒரு பௌத்தன் என கூறும் போது அழுகையை ஆரம்பித்தார். நாங்கள் சமய விடயங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தோம். அவரால் கடந்த காலம் தொடர்பில் பார்க்க முடியும். அது தொடர்பில் பேசிக்கொண்டிருந்தோம். என குறித்த வீடியோ பதிவில் தனுஷ்க குணதிலக கூறியுள்ளார். இருப்பினும் தாம் உடலுறவு கொள்வதற்கு முன்னர் பேசவில்லை என பொலிசாரிடம் கூறியிருந்தார் என்பதும் நீதிமதின்றதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இருவரும் பேசத் தொடங்குவதற்கு முன்பு இருவரும் உடலுறவு கொண்டதாக குணதிலகா போலீசாரிடம் கூறினார், அங்கு அந்த பெண் தனக்கு “எதிர்காலத்தை பார்க்கும்” சக்தி இருப்பதாக கூறினார்.

“அவளுக்கு வேறு சக்தி இருக்கிறது, நீங்கள் அதனை எவ்வாறு அழைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை… நான் ஒரு பௌத்தன் என்பதால் அந்த விஷயங்களைப் பற்றி நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்…” என்று அவர் அழத் தொடங்கும் முன் வீடியோ பதிவில் கூறினார்.

தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி கூறுமாறு அந்தப் பெண்ணிடம் தான் கேட்டதாகவும், அதற்கு முன் ஜென்மத்தில் “தனுஷ்க தாய்லாந்தில் தனது அண்டை வீட்டாராக இருந்ததவர்கள்” என பதிலளித்ததாகவும் தனுஷ்க பொலிசாரிடம் கூறியுள்ளார். அதனால் தான் பயந்து போனதாகவும், அந்த பெண் “கொஞ்சம் வித்தியாசமானவள்” என்று “ஒரு உணர்வு தனக்கு வந்ததாகவும்” பொலிசாரிடம் கூறிய அவர், இதனால் தான் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக அந்த பெண்ணிடம் கூறியதாகவும், அந்த பெண் தனக்கு வாடகை வண்டியை பதிவு செய்தார் எனவும் தனுஷ்க கூறியுள்ளார். அதற்காக அந்த பெண்ணுக்கு கடைசியாக அனுப்பிய செய்தி “நன்றி” என்பது தான் எனவும் தனுஷ்க கூறியுள்ளார். ஆனால் “நான் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை, அவள் எனக்கும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை” என்று குணதிலக பொலிஸாரிடம் கூறியிருந்தார்.
“அதுதான், நான் இங்கே இருக்கிறேன்.” எனவும் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

இருவருக்கும் இடையேயான உடலுறவு எதேட்சையாக நடைபெற்றதாகவும், அது நடக்க வாய்ப்பில்லை என்று தான் கருதியதால் தன்னுடன் ஆணுறைகளை வைத்திருக்கவில்லை என்றும் குணதிலக பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இரவில் அவர் அணிந்திருந்த பர்பெரி காற்சட்டை சோதனையிடப்பட்டதாகவும், இரண்டு ஆணுறைகள் பேப்பர்களில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பாலியல் குற்றப்பிரிவின் டிடெக்டிவ் சார்ஜென்ட் லாரா பீக்ரோப்ட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எந்த நேரத்திலாவது ஆணுறை இல்லாமல் ஆணுறுப்பை உள் வைத்தீர்களா என்று கேட்கப்பட்ட போது . “இல்லை, இல்லை, நிச்சயமாக இல்லை” என்று குணதிலகா பதிலளித்தார். இருப்பினும் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள விரும்புவதாக பொலிஸாரிடம் கூறியதை குணதிலக ஒப்புக்கொண்ட அதேவேளை, ஆனால் அவர்களின் சந்திப்பின் போது அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று மறுத்தார்.

“பொதுவாக நான் ஆணுறையுடன் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை” என்று நான் சொன்னேன், ‘ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள விரும்பவில்லை’ என்று நான் கூறவில்லை.” என்பதனையும் அவர் மேலும் கூறியிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது குறித்த பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் “தான் பொலிஸ் குறிப்பு புத்தகத்தை அந்த நேரத்தில் வைத்திருக்கவில்லை எனவும், அதனால் ஒரு துண்டு காகிதத்தில் அந்த வாக்குமூலத்தை பதிவு செய்தததாகவும், அதனை பின்னர் எறிந்து விட்டதாகவும்” தெரிவித்துள்ளார். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தமாக தனுஷ்கவின் வழக்கறிஞர் கேட்டதனையும் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தனக்கு நினைவு உள்ளதன் படி தனுஷ்க “சிறிது நேரத்தில் தன்னை ஆக்ரோஷமாக முத்தம் கொடுத்ததாகவும், தள்ளி, அறைந்து, கடித்ததாகவும்” அந்த பெண் முறைப்பாட்டில் தெரிவித்தாக பெண் கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றதாகவும், குறித்த பெண் தன் நண்பர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் சனிக்கிழமை 05 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டனிக்கு அருகிலுள்ள மதுபான உணவகத்தில் இருவரும் சந்தித்து கட்டி தழுவுவதும், பின்னர் மது அருந்திவிட்டு படகு மூலமாக பெண்ணின் வீட்டுக்கு சென்றதும் கண்காணிப்பு கமராக்கள் மூலம் பதிவாகியுள்ளன. குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 28 ஆம் திகதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version