இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையுடன் நிபா வைரஸைக் கண்டறியத் தேவையான விசேட பரிசோதனைக் கருவிகள் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவர என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய மருந்துகள், சிகிச்சை, அல்லது தடுப்பூசி எதுவும் உலகளவில் தயாரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நாடுகளுக்கு இடையே பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோய் துறையின் தலைமை வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.