இந்தியா கிரிக்கெட் அணி மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியினை வென்றதன் மூலம் முதலிடத்தை பெற்றுக் கொண்டது இந்தியா அணி. இன்னுமொரு போட்டியில் வெற்றி பெற்றால் உலகக்கிண்ண தொடரில் முதலிட அணியாக களமிறங்கும்.
முதலிடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணியை இரண்டாமிடத்துக்கு பின் தள்ளியே முதலிடத்தை இந்தியா பெற்றுக் கொண்டது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 116 புள்ளிகளை இந்தியா அணி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 118 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 20-20 போட்டிகளில் 264 புள்ளிகளோடு முதலிடத்தில் காணப்படுகிறது.
தென்னாபிரிக்கா அணி இதற்கு முன்னர் மூன்று வித போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
ச.விமல்