சுற்றுலாத்துறை அமைச்சும், அமைச்சரும் பெயருக்குத்தான்! சஜித்

வெலிகம குடாவைச் சுற்றி நடந்து வரும் நீர்ச்சறுக்கல் பொழுது போக்கு இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு முக்கியமான விளையாட்டாகும் என்றும், இவ்விளையாட்டுக்காக வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் தேசிய வர்த்தகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிய்விக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும் சுகாதார வசதிகள், உட்கட்டமைப்பு உள்ளிட்ட எந்த வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சரும் அமைச்சும் இருந்தும் அது பெயரளவில் மட்டுண்டுள்ளதாகவும், நாட்டின் டொலர் பற்றாக்குறையை ஈடு செய்ய உதவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இப் பிரதேசத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அவர்கள் தோல்வி கண்டுள்ளதாகவும் சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் (24.09) வெலிகம நகர கடற்கரையை அண்டி சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்ற போது இவ்வாறு தெரிவித்தார்.

இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பும் முயற்சியை மேற்கொள்வதாகவும்,இந்த விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமான சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது போன்ற கேள்விகளை முன்வைக்கும் போது அரசாங்கம் அதை நகைச்சுவையாக ஆக்கினாலும் இந்த விளையாட்டை ஊக்குவித்து டொலர்களை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் கூட நிறுத்தப்பட்டு, நகர சபைகள் பிரதேச சபைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதனால் இந்த விளையாட்டுக்குத் தேவையான வசதிகளை நகர சபையால் செய்து கொடுக்க முடியாதுபோயுள்ளதாகவும்,
இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்காவிடின் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை கூட புறக்கணிக்கும் அரசாங்கம் என எண்ணத்தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version