கொழும்பில் ஒருங்கிணைந்த தபாற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் நேற்று(25.09) திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1 மணி வரை மன்னார் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
சம்பள முரண்பாடு தீர்த்தல், வாழ்க்கைச் செலவாக இருபதாயிரம் ரூபாவை உயர்த்துதல், பதவி உயர்வு வழங்கல், பணி வெற்றிடங்களை நிரப்புதல் அடங்கலாகப் பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ரோகினி நிசாந்தன்
மன்னார் செய்தியாளர்