மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வு!

ஈழ விடுதலைக்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.09) காலை 10 மணியளவில் மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,தேசிய உணர்வாளர்கள்,நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நானாட்டன் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பரஞ்சோதி,மன்னார் நகரசபையின் முன்னாள் உப தவிசாளர், ஜான்சன் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்குச் சுடரேற்றி,மலர் தூவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version