ரயில்களில் கட்டாயமாக்கப்படும் பயணச்சீட்டு பரிசோதனை!

ரயில்களில் பயணசீட்டின்றி பயணிக்கும் பயணிகள் மீதான சோதனைகளை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொவிட்-19 வைரஸ் பரவல் காலக்கட்டத்தில், பயணசீட்டு பரிசோதனையை கைவிட்டதாகவும், தற்போது டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் முதல் இதுவரையான காலப்பகுதியில், மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து பயணச்சீட்டு இன்றி பயணித்த பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 225,000 ரூபாய் தண்டப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆகவே பயண சீட்டு பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version