அலங்கரிக்கப்பட்ட பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட பல பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பேருந்துகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சில பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் வீதியில் பயணிக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version