நாமலின் திருமண மின் பட்டியலை செலுத்தினார் சனத் நிஷாந்த

பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வின் போது பாவிக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய கட்டணம் 26 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் கடிதம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்பட்டு வந்தன.

“இவ்வாறான சூழ்நிலையில் போரை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தி செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசியலுக்கும் வியாபாரத்துக்கும் உதவிய நண்பர் குடும்பம் அது. போரை நிறைவு செய்த ஹீரோவுக்கு இவ்வாறு அவப்பெயர் ஏற்படுவதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே நான் அதனை செலுத்தி இந்த பிரச்சினையை தீர்த்துள்ளேன்” என நீர் வழங்கல் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துளளார்.

இன்று மின்சார சபை தலைவரை சந்திக்க வந்தேன். அதன் போது இந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் பேசி விபரங்களை பெற்றுக்கொண்டு அந்த பெறுமதியை செலுத்தியுள்ளேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது தானோ, தன் தகப்பனோ அந்த மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளவில்லை என தனக்கு தெரிவித்தார் என சனத் நிஷாந்த கூறியுள்ளார்.

அந்த திருமண நிகழ்வில் அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போன்றவர்கள் கலந்துகொண்டார். அதன்போது பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு தேவை கருதி வாய்மூல கோரிக்கையின் படி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டணம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினாலோ அல்லது வேறு அமைப்புகளினாலோ அது செலுத்தப்படவில்லை. ஆகவே எனது சொந்த கமபனியின் கணக்கிலிருந்து ரூபா 2,682,246.57 ஐ செலுத்தி இந்த பிரச்சினையை தீர்த்துள்ளேன் என அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version