ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியா அணி நேபாளம் அணியை 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் யஷாஸ்வி ஜஸ்வால் 49 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுள்ளார். இது அவரின் முதலாவது 20-20 சதமாகும். ரிங்கு சிங் 37 ஓட்டங்களையும், ஷிவம் டூபே, ருத்துராஜ் ஹெய்க்வூட் ஆகியோர் தலா 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் டிபேன்றா சிங் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் டிபேன்றா சிங் 32 ஓட்டங்களையும், குஷால் மல்லா, சந்தீப் ஜோரா ஆகியோர் 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ரவி பிஷோனி, அவேஷ் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.